T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 89 3 outlets citing General IN

Tamil Nadu news roundup: Onion prices, pig theft, and electricity costs

Reports from Tamil Nadu cover the sale of onions at cooperative ration shops for Rs 35, the recovery of 35 stolen pigs, and government decisions regarding the procurement of electricity at a cost of up to Rs 35 per unit.

First reported 2 days ago · latest update 1 hour ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
BBC News Tamil Authority 90

தமிழ்நாட்டில் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.37 வரைக்கும் கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைத் தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் இறுதி செய்துள்ளது.

மின் தேவை அதிகரித்ததும், மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையும் இதற்குக் காரணம் என மின்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். ஆனால், மின் கொள்முதலுக்கான ஏற்பாடுகளை அரசு முன்கூட்டியே செய்திருக்க வேண்டுமென திமுகவும் அதிமுகவும் விமர்சித்துள்ளன.

மின் கொள்முதல் ஒப்பந்த விவரங்களின்படி, அக்டோபர் 12 முதல் 31ஆம் தேதி வரை 1,500 மெகாவாட் மின்சாரத்தைத் தொடர்ந்து வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சநேரத் தேவைக்காக 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய தரவுகளின்படி, தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை மின்சாரம் வாங்கியதில் இதுவே அதிகபட்ச விலை. கடந்த 2022ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டுக்கு ரூ.24 வரை கொடுத்து மின்சாரம் வாங்கியதே முந்தைய அதிகபட்ச விலையாக இருந்தது.

"இந்த ஒப்பந்தங்கள் குறுகிய கால மின் தேவையைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலை நேரத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், அந்த நேரத்தில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் உச்சபட்ச மின்சாரத் தேவை 16,800 மெகாவாட்டாக இருந்தது என்றும், தற்போது அது 21,700 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

வெப்பநிலை அதிகரிப்பும் எல் நினோ தொடர்பான வானிலைச் சூழலும் மின் தேவையை உயர்த்தியுள்ளதாகக் கூறிய அவர் "மத்திய மின் தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், காற்றாலை மின் உற்பத்தியும் எதிர்பார்த்த அளவில் இல்லாததால் மின்சாரத் தேவையைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக" தெரிவித்தார்.

அத்துடன், மத்திய மின் தொகுப்பில் இருந்து என்.எல்.சி. நிறுவனத்தின் 1,850 மெகாவாட் மின்சாரமும், காற்றாலை மூலம் கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை என்றார் அமைச்சர். இதனால் மொத்தம் 4,850 மெகாவாட் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், மின்வெட்டைத் தவிர்ப்பதற்காகக் குறுகிய காலக் கொள்முதலை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்குவதால் விலை அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், "நாப்தா மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.47 வரை இருக்கும். நாப்தா மின்சாரத்தைவிட எரிவாயு மின்சாரம் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், தற்போதைய கொள்முதல் குறுகிய காலத்திற்கான ஏற்பாடு" என்றும் கூறினார்.

மேலும், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் மின் தேவை அதிகரிக்கும்போதும் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசு இவ்வாறு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

மின் தேவை அதிகரிக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும் என்பதால், அதற்கான கொள்முதல் ஏற்பாடுகளை அரசு முன்னதாகவே செய்திருக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக எச்சரித்ததாகக் குறிப்பிட்ட அவர், "கடைசி நேரத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக" கூறினார். முந்தைய ஆட்சியில் குறைந்த விலையில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு அதிக விலையில் மின்சாரம் வாங்குவது என்ன வகையான மாற்றம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கொள்முதலுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க நவம்பர், டிசம்பர் மாதங்களிலேயே கொள்முதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், கூடுதலாக எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதைக் கணக்கிட்டு ஒப்பந்தங்களைச் செய்ததாகக் கூறிய செந்தில் பாலாஜி, "ஆனால், தற்போதைய அரசு குறுகிய காலத்தில் ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாக" விமர்சித்தார்.

ஏலத்தில் அதிக விலை கேட்கப்பட்டால் அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும் அல்லது ஏலத்தை மீண்டும் கோர வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி கூறினார். தற்போதைய கொள்முதல் ஏற்பாடுகளில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தனது விமர்சனத்தில் வலியுறுத்தியுள்ளார்.

தவெக செய்தித் தொடர்பாளர் பழ. செல்வகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "மின்சாரக் கொள்முதல் இரண்டு வகைப்படும். ஒன்று நீண்டகால மின் கொள்முதல்; மற்றொன்று குறுகிய கால மின் கொள்முதல். எல் நினோ தாக்கத்தை முந்தைய அரசு முன்கூட்டியே கணித்திருந்தால், நீண்ட கால மின் கொள்முதலுக்குச் சென்றிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது."

"மின்வெட்டு ஏற்பட்டதால், தவெக அரசு அதிக விலையில் குறுகிய கால மின் கொள்முதலை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்பட்டது" என்றார்.

தற்போதைய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், கடந்த 2021ஆம் ஆண்டு எதிர்க்கட்சியில் இருந்தபோது, ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20க்கு வாங்குவதையே விமர்சித்ததாக செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டினார்.

அப்போது ரூ.20க்கு மின்சாரம் வாங்கியதற்காக மின்துறை அமைச்சர் பதவி விலக வேண்டுமென நிர்மல் குமார் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்ததாகக் கூறிய செந்தில் பாலாஜி, "இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலையில், தற்போதைய மின்துறை அமைச்சர் என்ன செய்யப் போகிறார்" என்றும் கேள்வி எழுப்பினார்.

கரூரில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் பாடிய பாடலைக் குறிப்பிட்டுப் பேசிய செந்தில் பாலாஜி, "இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.35 அல்லது ரூ.37 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் நிலையைப் பற்றி விஜய் பாடல் பாடுவாரா" என்றும் கேள்வி எழுப்பினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மின் வாரியத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார். முந்தைய ஒப்பந்தங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 முதல் ரூ.20 வரையிலான விலையில் செய்யப்பட்டு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய கொள்முதல் விலையை விமர்சித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மின்வாரியம் ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும், ஆண்டுதோறும் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் கடனுக்கான வட்டி செலுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது மின் வாரியத்தின் நிதிநிலையைப் பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மின் தேவையைச் சமாளிக்க நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, "குறைந்தபட்சம் 4,000 மெகாவாட் மின்சாரத்துக்கான நீண்ட காலக் கொள்முதல் ஏற்பாடுகளையும், 1,500 மெகாவாட்டுக்கான ஐந்தாண்டு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது."

நீண்ட காலமாக முடங்கியுள்ள உப்பூர் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் மின் தேவையைச் சமாளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கூடுதல் மின்சாரம் வாங்குவதற்காக நாளொன்றுக்கு ரூ.5 கோடி செலவாகும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 12 முதல் 31 வரையிலான 20 நாள்களைக் கணக்கில் கொண்டால், இந்த மதிப்பீட்டின்படி மொத்தச் செலவு ரூ.100 கோடியாக இருக்கும்.

இது நாளொன்றுக்கான செலவு மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகை. ஒப்பந்தம் செய்யப்பட்ட முழு அளவு மின்சாரத்தையும் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளதால், உண்மையான செலவு வாங்கப்படும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மாறலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

↗ Read the original at BBC News Tamil

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

90 BBC News Tamil ★ most authoritative citation

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 வரை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்தது ஏன்? முழு பின்னணி

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையைச் சமாளிக்க ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை கொடுத்து மின்சாரம் வாங்கும் முடிவை தமிழ்நாடு அரசு இறுதி செய்துள்ளது விமர்சனங்களைச் சந்திப்பது ஏன்? இந்த முடிவின் பின்னணி என்ன?

1 hour ago
80 Google News Tamil Business

கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை: புகாா் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் - DinaMani

கூட்டுறவு ரேசன் கடைகளில் வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை: புகாா் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிமுகம் DinaMani

2 days ago
78 News18 Tamil

🔷திருடுபோன 35 பன்றிகள் பறிமுதல் - News18 Tamil

🔷திருடுபோன 35 பன்றிகள் பறிமுதல் News18 Tamil

2 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app