T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 82 3 outlets citing Politics IN

Delhi High Court rejects Enforcement Directorate plea in National Herald case

The Delhi High Court has dismissed a request filed by the Enforcement Directorate regarding the ongoing National Herald case. No further details on the specific nature of the rejected plea were provided.

First reported 17 hours ago · latest update 11 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சொத்துக்கள் முடக்கப்பட்டதில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்து விட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரூ.752 கோடி மதிப்புடைய சொத்துக்களை முடக்கியுள்ளது. இதுதொடா்பான வழக்கு, தில்லி உயா் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமலாக்கத்துறை சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு ஆஜராகி வாதாடுகையில், ‘முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென குற்றம்சாட்டப்பட்டோா் தீா்ப்பாயத்தில் முறையிட்டுள்ளனா். ஆதலால் இந்த நிலையிலேயே அதற்கு தடைபோட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இதை நீதிபதி ஏற்கவில்லை. இதுகுறித்து நீதிபதி கூறியபோது, அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை எடுத்து கொள்ள விசாரணை நீதிமன்றம் மறுத்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இறுதி முடிவெடுப்பதாகவும், இதில் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறினாா்.

இதற்கு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, தில்லி உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பயன்படுத்தி, முடக்கப்பட்ட சொத்துக்களை குற்றம்சாட்டப்பட்டோா் திரும்ப பெறக்கூடும் என்றும், எனவே அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மீது முடிவெடுக்கும் வரை, தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை வைத்தாா்.

ஆனால் இக்கோரிக்கையை உயா் நீதிமன்ற நீதிபதி ஏற்கவில்லை. இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும், இறுதி விசாரணைக்கு பிறகே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை கோரிக்கை நிராகரிப்பு- தில்லி உயா் நீதிமன்றம் - DinaMani

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை கோரிக்கை நிராகரிப்பு- தில்லி உயா் நீதிமன்றம் DinaMani

17 hours ago
80 Google News Tamil Sports

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை கோரிக்கை நிராகரிப்பு- தில்லி உயா் நீதிமன்றம் - DinaMani

நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை கோரிக்கை நிராகரிப்பு- தில்லி உயா் நீதிமன்றம் DinaMani

17 hours ago
80 Google News Tamil Technology

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு - Daily Thanthi

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு Daily Thanthi

11 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app