ராஷ்மிகா மந்தனா: "என் கஷ்டங்களுக்கு இந்த புன்னகையே போதும்!"- 400 குடும்பங்களை தத்தெடுத்த பின்னணி! - Cinema Vikatan
ராஷ்மிகா மந்தனா: "என் கஷ்டங்களுக்கு இந்த புன்னகையே போதும்!"- 400 குடும்பங்களை தத்தெடுத்த பின்னணி! Cinema Vikatan
First reported 1 day ago · latest update 3 hours agoதிரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் மனிதநேயமிக்க ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். பின்தங்கிய 400 குடும்பங்களின் ஒரு வருடப் பசியைப் போக்கும் வகையில் மளிகைப் பொருட்களை வழங்க முன்வந்துள்ள அவரது செயல் நாடு முழுவதும் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.இந்த மாபெரும் உதவிக்கு வித்திட்டது அவர் நடித்த திரைப்படம் என்பதுதான் இதில் மிகவும் சுவாரசியமான தகவல். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா நடித்த வரலாற்றுப் பின்னணி கொண்ட திரைப்படம் 'ரணபலி' (Ranabaali). இத்திரைப்படம் 1876–1878 காலகட்டத்தில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடூரமான தாது வருடப் பஞ்சத்தை (The Great Madras Famine) மையமாகக் கொண்டு உருவானது..இப்படத்தில் ராஷ்மிகா 'ஜெயம்மா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஞ்சத்தால் மக்கள் தவித்த வரலாற்று வலிகளைத் திரையில் உள்வாங்கி நடித்தபோது, அந்தப் பாத்திரம் அவரது மனதை ஆழமாகப் பாதித்துள்ளது.
"நான் நடித்த ஜெயம்மா கதாபாத்திரத்திற்கும் எனக்கும் என்ன ஒற்றுமை என்று பலரும் கேட்கிறார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற இந்த குணம் எனக்கும் அவளுக்கும் பொதுவானதுதான்" என்று ராஷ்மிகா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்..ராஷ்மிகா அறிவித்துள்ள இந்த நலத்திட்டம் வெறும் ஒருநாள் நிகழ்வு அல்ல; திட்டமிடப்பட்ட ஒரு நீண்ட காலப் பங்களிப்பு. 400 குடும்பங்களுக்கு, ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.எளிய குடும்பங்களின் மாத வருமானத்தில் பெரும் பகுதி மளிகைப் பொருட்களுக்கே செலவாகிறது. உணவுப் பொருட்களை இலவசமாக வழங்குவதன் மூலம், அந்தப் பணத்தை அவர்கள் சேமித்து, தங்கள் குழந்தைகளின் கல்விக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்..இதுவரை தான் செய்து வந்த உதவிகளை ரகசியமாகவே வைத்திருந்த ராஷ்மிகா, இந்த முறை பொதுவெளியில் அறிவித்ததற்கான காரணத்தையும் பகிர்ந்துள்ளார்.
"இத்தனை காலமும் எனக்கும் எனது குழுவினருக்கும் மட்டுமே தெரியும்படி பல உதவிகளை அமைதியாகச் செய்து வந்தேன். ஆனால், இந்த அறிவிப்பைப் பார்த்து உங்களில் சிலராவது உத்வேகம் பெற்று, மற்றவர்களுக்கு சிறு உதவிகளைச் செய்ய முன்வந்தால் அதுவே எனக்குப் பெரும் மகிழ்ச்சி. கருணை காட்டுவது பெரிய காரியமாக இருக்க வேண்டியதில்லை; சிறிய செயலாக இருந்தாலும் ஒரு மனிதரின் வாழ்க்கையையே மாற்றும்."மேலும், "படப்பிடிப்புக்காக நான் தூக்கமில்லாமல் கழித்த இரவுகள், உடலில் ஏற்பட்ட காயங்கள், உழைப்பு, கண்ணீர், வலிகள் அனைத்திற்கும் இந்த 400 குடும்பங்களின் முகத்தில் மலரும் புன்னகையே ஈடில்லாத விலைமதிப்பற்ற பரிசு" என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்..வறுமை மற்றும் உணவுப் பற்றாக்குறை குறித்த வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்ததன் தாக்கத்தை வெறும் நடிப்புடன் நிறுத்திவிடாமல், எளிய மக்களின் அன்றாடப் பசியைப் போக்கும் செயலாக மாற்றியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சமூக நலனுக்கான விழிப்புணர்வை விதைக்கும் கருவி என்பதை இவரது செயல் மெய்ப்பித்துள்ளது.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
ராஷ்மிகா மந்தனா: "என் கஷ்டங்களுக்கு இந்த புன்னகையே போதும்!"- 400 குடும்பங்களை தத்தெடுத்த பின்னணி! - Cinema Vikatan
ராஷ்மிகா மந்தனா: "என் கஷ்டங்களுக்கு இந்த புன்னகையே போதும்!"- 400 குடும்பங்களை தத்தெடுத்த பின்னணி! Cinema Vikatan
1 day ago’ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’... 400 குடும்பங்களை தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா - குவியும் பாராட்டு! - News18 Tamil
’ப்ராஜெக்ட் அன்னபூர்ணா’... 400 குடும்பங்களை தத்தெடுத்த ராஷ்மிகா மந்தனா - குவியும் பாராட்டு! News18 Tamil
3 hours ago400 குடும்பங்களை தத்தெடுப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவிப்பு… ரசிகர்கள் பாராட்டு! - News18 Tamil
400 குடும்பங்களை தத்தெடுப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா அறிவிப்பு… ரசிகர்கள் பாராட்டு! News18 Tamil
1 day ago