Jailer 2 Movie Reviews and Audience Reception
Reviews for the film 'Jailer 2' are mixed, with critics and netizens highlighting Rajinikanth's performance and various cameo appearances. Some feedback suggests the film's second half lacks impact and logic, despite the high anticipation surrounding the project.
First reported 9 hours ago · latest update 2 hours ago
மகனின் மரணத்துக்குப் பிறகு, தன் குடும்பத்துக்கு ஏதும் ஆபத்துகள் வராமலிருக்க, வர்மனுக்கு (விநாயகன்) மேலிருக்கும் முதலாளியைத் தேடி வருகிறார் 'டைகர்' முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்). குடும்பத்துடன் கோயம்புத்தூரில் இருப்பவர், ஒரு கட்டத்தில் கேரள பார்டரில் பழக்கடை வைத்திருக்கும் மூர்த்தியிடம் (நமோ நாராயணா) டிரைவராகச் சேர்கிறார்.
அவர் மூலம் சிலைக்கடத்தல் செய்யும் திலீப்புக்கு (சுராஜ் வெஞ்சரமூடு) சுத்துப் போடுபவர், அனைவருக்கும் பாஸாக இருக்கும் போதி கல்பக்கை (எஸ்.ஜே.சூர்யா) நெருங்கினாரா என்பதே படத்தின் கதை.
டைகர் முத்துவேல் பாண்டியனாக ஸ்டைலான நடை, கூலிங்கிளாஸ் ஆக்ஷன், துப்பாக்கி அதிரடி என ஃபுல் ஃபார்மில் ரஜினிகாந்த். நேரடி சண்டைக்காட்சிகள், நடனம் போன்றவற்றைத் தவிர்த்தது முதிர்ச்சி! பிரதான வில்லன்களாக சுராஜ் வெஞ்சரமூடு முதல் பாதியையும், எஸ்.ஜே.சூர்யா இரண்டாம் பாதியையும் ஆக்கிரமிக்கின்றனர்.
சுராஜ் வில்லனிசத்தோடு கலகலப்பையும் வழங்க, எஸ்.ஜே.சூர்யா தன் வழக்கமான நடிப்பால் சுவாரஸ்யம் சேர்க்கிறார். வித்தியாச வில்லன் நடிகையாக வித்யா பாலன் மிரட்ட, மிதுன் சக்ரபோர்த்தியும் தேவையான உருட்டல் மிரட்டலை வழங்குகிறார்.
காமெடி ஏரியாவில் அதகளம் செய்யும் வாய்ப்பு நமோ நாராயணாவுக்கு! அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முதல் பாதி முழுக்க திரையரங்கைச் சிதறடிக்கிறார். யோகி பாபு அதற்குத் துணை நிற்க, முதல் பாகத்தில் வந்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் மற்றும் மாஸ்டர் ரித்விக் அதே வேடங்களில் தலைகாட்டுகின்றனர். கேமியோ ஸ்டார்களாக சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் முதல் பாகத்தின் நீட்சியாகவே வந்து போகின்றனர்.
பல நிலப்பரப்புகளில் நடக்கும் கதையைப் புழுதி பறக்க படமெடுத்து இருக்கிறது விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா. கார் வைப்பர் ஷாட், கார் வெடிப்பது, ஸ்லோமோ ஷாட் என விருந்து வைத்திருக்கிறது அவரின் ஒளிப்பதிவு. நிதானமாகத் தொடங்கி, இடைவேளைக்கு முன்னர் வேகமெடுத்து, பின்னர் அதை அப்படியே தக்க வைத்திருக்கிறது ஆர்.நிர்மலின் படத்தொகுப்பு.
பில்டிங் வெடிப்பது, விமானம் வெடிப்பது போன்றவற்றை இன்னும் நேர்த்தியான கிராபிக்ஸில் காட்டியிருக்கலாம். அனிருத் இசையில் பாடல்களே பின்னணி இசையாக ஒலிப்பது மாஸ் கூட்டியிருக்கிறது. ஆனால், 'அல்லா போலேலே' பாடலும், இரண்டாம் பாதி 'பிந்தாஸ்' பாடலும் வேகத்தடைகளே!
முதல் பாகம் முடிந்து மூன்று மாதங்கள் கழித்து நடக்கிறது கதை. முத்துவேல் பாண்டியனின் சூப்பர் மார்க்கெட் வேலை, குடும்பம் என நகரும் கதையில் நமோ நாராயணாவின் மூர்த்தி கதாபாத்திரம் வந்ததும் சூடு பிடிக்கிறது. சிலைக் கடத்தல், அதை வைத்து வில்லனுக்கு ஸ்கெட்ச், ஆங்காங்கே வெளிப்படும் 'ஜெயிலர்' முகம் எனக் காமெடி, அதிரடி கலந்து பறக்கிறது முதல் பாதி.
இடைவேளை சுவாரஸ்யம் சேர்த்தாலும், அதைச் சட்டென காலி செய்கிறது இரண்டாம் பாதியின் முதல் காட்சி. அதன் பிறகு கோவா எபிசோடு மாஸ் கூட்ட, நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது திரைக்கதை.
ஆனால் கிடைத்த வேகத்தைப் பயன்படுத்தாமல், அதன் பிறகு சுவாரஸ்யம் இழக்கிறது திரைக்கதை. சென்டிமென்ட் காட்சி பாஸானாலும் அதன் பிறகு வரும் சர்ப்ரைஸ் கேமியோ உட்பட, க்ளைமாக்ஸ் வரை நீளும் படலத்தில் புதுமைகள் இல்லை, புத்திசாலித்தனமும் இல்லை லாஜிக்கும் இல்லை. இத்தனை கேமியோக்களுக்கான அவசியமும் இந்தத் திரைக்கதையில் இல்லையே நெல்சன்?
சரியான வேகத்துடனும், மாஸ் படத்துக்கான மீட்டருடனும் கச்சிதமாக இருந்த முதல் பாதியும், ஒரு சில காட்சிகள் தவிர, மனதில் நிற்காத இரண்டாம் பாதியும் 'ஜெயிலரின்' இரண்டாம் வருகையை வலுவிழக்கச் செய்திருக்கின்றன. இருந்தபோதும், ரஜினியின் ஆராவும் நெல்சனின் மேக்கிங்கும் படத்தை திரையரங்க விருந்தாக்கியிருக்கின்றன.
Citations · 4 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
Jailer 2 Review: 'டைகர்' ரஜினி, 'வாவ்' கேமியோ, மிஸ் ஆன லாஜிக்... அலப்பறை கிளப்புகிறதா ஜெயிலர் 2? - Cinema Vikatan
Jailer 2 Review: 'டைகர்' ரஜினி, 'வாவ்' கேமியோ, மிஸ் ஆன லாஜிக்... அலப்பறை கிளப்புகிறதா ஜெயிலர் 2? Cinema Vikatan
2 hours agoJailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? - ABP Nadu
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ABP Nadu
6 hours agoJailer 2 Review: 'டைகர்' ரஜினி, 'வாவ்' கேமியோ, மிஸ் ஆன லாஜிக்... அலப்பறை கிளப்புகிறதா ஜெயிலர் 2? - Cinema Vikatan
Jailer 2 Review: 'டைகர்' ரஜினி, 'வாவ்' கேமியோ, மிஸ் ஆன லாஜிக்... அலப்பறை கிளப்புகிறதா ஜெயிலர் 2? Cinema Vikatan
2 hours agoJailer 2 Movie Review | மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர்..? - ரஜினியின் ‘ஜெயிலர் 2’ எப்படி? - நெட்டிசன்கள் விமர்சனம் இதோ! - News18 Tamil
Jailer 2 Movie Review | மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர்..? - ரஜினியின் ‘ஜெயிலர் 2’ எப்படி? - நெட்டிசன்கள் விமர்சனம் இதோ! News18 Tamil
9 hours ago