தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்? - Vikatan
தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்? Vikatan
First reported 1 day ago · latest update 1 hour agoதென்மேற்கு பருவமழை விடைபெற்றதைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை முறைப்படி தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதனையொட்டி, சென்னையில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். மழை காலத்தில் சென்னை மற்றும் மழையினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
பருவமழை களம் கண்டிருக்கும் நிலையில், 'இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?' என்ற கேள்வியுடன் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரனைத் தொடர்புகொண்டு பேசினோம்.
" சூப்பர் எல் நினோ, நேர்மறையாக (Positive IOD) இந்தாண்டு வடகிழக்கு பருவமழையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்று மாதங்களில் இயல்பாக 44 செ.மீ மழை பதிவாக வேண்டும். இந்தாண்டு 50 முதல் 60 செ.மீ மேல் அதிக மழை பதிவாகும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அதித கனமழைக்கும், குறுகிய நேரத்தில் அதிக மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
வடகடலோரம், காவிரி டெல்டா, தென் கடலோரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பிற்கு மிகுதியான மழை பதிவாகும். சூப்பர் எல் நினோ தாக்கத்தால் காற்று பாதிப்பை ஏற்படுத்தும் புயல் உருவாக வாய்ப்பு இல்லை. மழை தரும் புயல்கள் உருவாகலாம்.
வங்ககடல் மற்றும் அரபிக்கடலில் தலா ஒரு புயல் உருவாகக் கூடும். அக்டோப்ர் 20 முதல் டிசம்பர் 20 வரை இரண்டு மாதங்கள் வடகிழக்கு பருவழை 6 சுற்றுகளாக மழைப்பொழிவை கொடுக்கும். நவம்பர் மாதம் பிரதான மழை மாதமாக அமைந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.
சூப்பர் எல் நினோ இரண்டாம் கட்ட தாக்கம் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் அமைந்து குறுகிய நேரத்தில் அதித கனமழை, பெருமழை நிகழ்வுகளை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்கப்படுகிறது" என்று வடகிழக்கு பருவமழை குறித்து விளக்கினார்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவைத் தரக் காத்திருக்கிறது. குறிப்பாகக் குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் 'அதிதீவிர மழை' சவாலாக அமையக்கூடும். எனவே, அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு சேர்ந்து, மக்களும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றித் தயாராக இருக்க வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
Citations · 5 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்? - Vikatan
தொடங்கியது வடகிழக்கு பருவமழை; தமிழகத்தில் இந்த ஆண்டு மழைப் பொழிவு எப்படி இருக்கும்? Vikatan
13 hours agoஇன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை..! - Daily Thanthi
இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை..! Daily Thanthi
1 day agoவடகிழக்கு பருவமழை தொடங்கியது..! 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை - Daily Thanthi
வடகிழக்கு பருவமழை தொடங்கியது..! 9 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை Daily Thanthi
13 hours agoதமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி - Daily Thanthi
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும்? - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி Daily Thanthi
9 hours agoதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை - Dinamani
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை Dinamani
1 hour ago