T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 88 3 outlets citing Politics IN

தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

First reported 2 weeks ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamalar Authority 85

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நிபந்தனையை மீறி திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் விழா நடத்திய விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திரிணமுல் காங்., கட்சியின் நிறுவன நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முன்னதாக, இந்த விழாவில், 1,500 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை கொல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில், திரிணமுல் காங்., கட்சியின் நிறுவன நாளின்போது உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஏராளமானோர் கூடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் அக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவை மீறியதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதுடன், அக்கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கை மீறும் வகையில் திரிணமுல் காங்., கட்சியினர் சிலர் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். இதற்காகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

↗ Read the original at Dinamalar

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

85 Dinamalar ★ most authoritative citation

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட மம்தா மீது வழக்கு - Dinamalar

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்ட மம்தா மீது வழக்கு Dinamalar

2 weeks ago
80 Google News Tamil Sports

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு - ETV Bharat

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ETV Bharat

1 week ago
78 News18 Tamil

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு - tamil.news18.com

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 2 வழக்குகள் ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு tamil.news18.com

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app