T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 82 3 outlets citing Entertainment IN

நிமிஷா சஜயன் 14 kg எடை அதிகரித்து காவல்துறை பாத்திரம் ஏற்றார்

பல தமிழ் ஊடகங்கள் தெரிவித்ததின்படி, நடிகை நிமிஷா சஜயன் புதிய படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துக்கொள்ள இரண்டு மாதங்களில் 14 kg உடல் எடை அதிகரித்தார். இந்த மாற்றம் படத்தின் தயாரிப்புக்காக மேற்கொள்ளப்பட்டது; இதைத் தொடர்பாக எந்த முரண்பாடும் இல்லை.

First reported 2 weeks ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

ஹிந்தியில் பபிதா சிங் ரிப்போர்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக.28ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியானது. நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தப் படத்துக்கு அமிதா வியாஸ் கதை எழுத, அம்பிகா பண்டிட் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த கதாபாத்திரத்துக்காக சுமார் 14 கிலோ (58 கிலோவில் இருந்து 72 கிலோ) உடல் எடையைக் கூட்டினேன். உண்மையில் எடைக்குறைப்பு பயணம் என்பது வேறுகதையாக இருந்தது.

முதல் 10 நாள்கள் மிகவும் கடினமாக இருந்தது. சரியான தூக்கமில்லை, மனநிலை மாற்றங்கள், களைப்பு, வெறுப்பு என பல தருணங்களில் என்னால் முடியவில்லை என்றே தோன்றியது. பலமுறை எனது பயிற்சியாளரிடம் அமர்ந்து ‘என்னால் செய்ய முடியவில்லை’ என அழுதிருக்கிறேன்.

எனது பயிற்சியாளர் அலி ஷிபாஸ் நீங்கள் மட்டுமில்லை என்றால் என்னால் இதைச் செய்திருக்கவே முடியாது. இந்தப் பயணத்தில் நீங்கள் எனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தீர்கள். கைவிட நினைக்குபோதெல்லாம் எனக்கு உந்துதல் அளித்து உடற்பயிற்சியை நம்பவைத்தீர்கள்.

எனது மோசமான நாள்களை நீங்கள் விமர்சிக்கவில்லை; என்னை குற்றவுணர்வுக்கும் ஆளாக்கவில்லை. ஒவ்வொரு நாளும் என்னுடன் இருந்தீர்கள். வெறுப்பாகி களைப்பில் எல்லாவற்றையும் விட நினைத்திருக்கிறேன். எப்படியோ என்னை அடுத்த நாளுக்குக் கூட்டிச் செல்வீர்கள்.

இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டது எடைக் குறைப்பு என்பது பொறுமையும் தொடர்ச்சியான உடற்பயிற்சியை நம்புவதும் குறிப்பாக சரியான நபர் நமது பின்னாடி இருப்பதுதான்.

என்னுடன் இருந்து எனது சவால்களை எளிதாக்கியவர் நீங்கள். எனது சிறந்த பயிற்சியாளர், எனது நலம்விரும்பி, தொடர்ச்சியாக ஊக்கம் அளிப்பவர். என்னை நானே நம்பாதபோதும் என்னை நம்பியதுக்கு நன்றி ஷிபுக்கா. நீங்கள் இல்லாமல் இதைச் செய்திருக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்! - Dinamani

காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்! Dinamani

2 weeks ago
80 Google News Tamil Business

காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்! - Dinamani

காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்! Dinamani

2 weeks ago
80 Google News Tamil Entertainment

இரண்டு மாதங்களில் 14 கிலோ.. படத்துக்காக உடல் எடையை அதிகரித்த நிமிஷா சஜயன்! - Puthiyathalaimurai

இரண்டு மாதங்களில் 14 கிலோ.. படத்துக்காக உடல் எடையை அதிகரித்த நிமிஷா சஜயன்! Puthiyathalaimurai

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app