T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 86 3 outlets citing India IN

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! - Dinamani

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! Dinamani

First reported 2 weeks ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

சட்டப்பேரவையில் இன்று(ஆக. 31) மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் திங்கள்கிழமை பேரவைக் கூடியது. இதையடுத்து, 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி, சேலைகள் குறித்த கவன ஈர்ப்புத் தீா்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் புதிய அறிவிப்புகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டார்.

* உயரம் குறைந்தமாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்கலனால் இயங்கும் உபகரணம் ரூ. 4 கோடி மதிப்பில் வழங்கப்படும்.

* அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 10 இல்லங்கள் ரூ. 1.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக அறிவுசார் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் ரூ. 1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக இரண்டு இல்லங்கள் ரூ. 0.49 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

* அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 3 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும், புறஉலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 2 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 1 ஆரம்ப நிலை பயிற்சி மையமும் என மொத்தம் 6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் ரூ. 0.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

* கடலூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மொத்தம் 100 பயனாளிகள் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீட்டில் இரண்டு இல்லங்கள் கட்டப்படும். இவ்வில்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.

* தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் துணையாளர் ஒருவருடன் அரசுப்போக்குவரத்து கழகங்களின் மாநகர / நகர தாழ்தளப் பேருந்துகள், (Express), LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

* செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் முறையில் கற்பிக்கும் திட்டம் ரூ. 0.64 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.

* பார்வை மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் வாசிப்பாளர் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.

↗ Read the original at Dinamani

Citations · 4 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! - Dinamani

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! Dinamani

2 weeks ago
84 Dinamani

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு: மீனவர் நலத் துறை அறிவிப்புகள்! - Dinamani

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு: மீனவர் நலத் துறை அறிவிப்புகள்! Dinamani

1 week ago
80 Google News Tamil Business

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! - Dinamani

வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு! மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள்! Dinamani

2 weeks ago
80 Google News Tamil Sports

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு: மீனவர் நலத் துறை அறிவிப்புகள்! - dinamani.com

மீனவ குடும்பங்களுக்கு உதவித் தொகை உயர்வு: மீனவர் நலத் துறை அறிவிப்புகள்! dinamani.com

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app