T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 90 3 outlets citing World IR

Reports of Deadly Attack on Wedding in Iran

Media outlets report that an attack on a wedding celebration in Iran has resulted in four fatalities. The reports attribute the incident to the United States.

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில், அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள ஈரானின் ஹோர்மோசான் மாகாணத்தில் உள்ள சிரிக் நகரத்தில், புதன்கிழமை (செப். 2) அதிகாலை திருமணக் கொண்டாட்டம் நடைபெற்ற ஒரு வீட்டின் மீது அமெரிக்க படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 63 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஈரானின் குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசு மறுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஈரானில் உள்ள ராணுவக் கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், ஈரானிய படைகளைப் போல மக்கள் குடியிருப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது எனவும் அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு, ஈரானின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவைக் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஈரானின் செம்பிறை இயக்கம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை அருகே வணிகக் கப்பல்கள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றஞ்சாட்டி ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! - dinamani.com

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! dinamani.com

1 week ago
80 Google News Tamil Sports

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! - Dinamani

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! Dinamani

1 week ago
80 Google News Tamil Business

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! - Dinamani

ஈரானில் திருமணக் கொண்டாட்டத்தில் அமெரிக்கா தாக்குதல்! 4 பேர் பலி! Dinamani

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app