T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 80 3 outlets citing Entertainment IN

Recent statements from Indian film and political figures

Various reports cover disparate topics, including actor Vishnu Vishal discussing the challenges of success in cinema, politician E.V. Velu commenting on the Chief Minister's body language, and actress Aishwarya Lekshmi explaining her professional choices regarding co-star Dulquer Salmaan.

First reported 1 week ago · latest update 6 days ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் துல்கர் சல்மானுடன் தொடர்ந்து இணைந்து நடிக்காதது குறித்து பேசியுள்ளார்.

தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படமும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ”கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானை நான் ’ராஜூவேட்டா’ என்றே அழைப்பேன். ஆனால், ரசிகர்களிடம் அது கேலி, கிண்டலாக மாறியது. முக்கியமாக, ஹலோ மம்மி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அப்படத்தின் உதவி இயக்குநர் என்னை ராஜூவேட்டா என அழைத்துக் கிண்டல் செய்தார். இந்த எதிர்மறையான விமர்சனங்கள் என்னை மனதளவில் பாதித்தது.

இதனால், இனிமேல் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க மறுத்துவிடலாம் என நினைத்தேன். அதேபோல், அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும்போதெல்லாம் மறுத்தும் வருகிறேன். ஓணம் பண்டிகைக்காக ஒரு விளம்பரப் படத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், மீண்டும் ஏதாவது கேலி, கிண்டல்கள் நிகழ்ந்து என்னால் அந்த விளம்பரப்படமும் பாதிப்பைச் சந்திக்கக்கூடாது என அதனையும் மறுத்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

அதனால்தான் துல்கர் சல்மானுடன் நடிப்பதில்லை: ஐஸ்வர்யா லட்சுமி - Dinamani

அதனால்தான் துல்கர் சல்மானுடன் நடிப்பதில்லை: ஐஸ்வர்யா லட்சுமி Dinamani

6 days ago
83 Vikatan

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு - vikatan.com

"ஸ்டாலினை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பாடி லாங்வேஜ்; அதனால்.!" - எ.வ வேலு vikatan.com

1 week ago
80 Google News Tamil Entertainment

“சினிமாவில் வெற்றி கிடைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அது வரும் போது...” - விஷ்ணு விஷால் பேச்சு - Nakkheeran

“சினிமாவில் வெற்றி கிடைப்பது ரொம்ப கஷ்டம், அதனால் அது வரும் போது...” - விஷ்ணு விஷால் பேச்சு Nakkheeran

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app