T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 90 3 outlets citing Politics IN

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க நவம்பர் 1 ஆம் தேதி வரை கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நவம்பர் 1-ஆம் தேதிக்குள் தமிழ் மொழியில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

தமிழகத்தில் உள்ள கடைகளில் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என 2025 ஜூன் மாதத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. பெயர்ப் பலகைகளில் தமிழ்ப் பெயருக்குக் கீழே ஆங்கிலத்தில் பெயர் வைத்துக் கொள்ளலாம் என்றும், தவறினால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது.

இதனிடையே, அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள இந்திய சில்லரை வர்த்தகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேந்தர் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, இறுதி வாய்ப்பாக நவம்பர் 1 ஆம் தேதிக்குள் கடைகளில் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என்றும், கெடு முடிவதற்குள் பெயர்ப் பலகைகளை மாற்றத் தவறினால், அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவு - Dinamani

நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவு Dinamani

1 week ago
80 Google News Tamil Business

நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவு - Dinamani

நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவு Dinamani

1 week ago
78 News18 Tamil

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை.. நவம்பர் 1 ஆம் தேதி வரை கெடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு - News18 Tamil

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை.. நவம்பர் 1 ஆம் தேதி வரை கெடு.. உயர் நீதிமன்றம் உத்தரவு News18 Tamil

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app