नेपाल में बाढ़ के 11 दिन बाद 2 लोग जीवित मिले; मोदी और पुतिन की 11 दिनों में दूसरी मुलाकात
नेपाल में आई भीषण बाढ़ के 11 दिन बाद दो लोगों को सुरक्षित बचा लिया गया है। इसके अतिरिक्त, प्रधानमंत्री नरेंद्र मोदी और रूसी राष्ट्रपति व्लादिमीर पुतिन 11 दिनों के भीतर दूसरी बार मुलाकात करने वाले हैं।
First reported 1 week ago · latest update 6 days ago
காத்மாண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய ஒரு பெண்ணும், சுரங்கத்தில் இருந்து ஒரு சீன பணியாளரும், 11 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆக., 26ம் தேதி, பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, 11வது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தது. நேற்று முன்தினம், சுரங்கத்தில் சிக்கியிருந்த இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெத்ராவதி பகுதியில், பலத்த சேதமடைந்த நான்கு மாடி வீடு ஒன்றின் கூரை பகுதியில் பெண் ஒருவர் சிக்கியிருப்பதை மீட்புப் படையினர் கண்டறிந்தனர். கீழ் தளங்கள் முழுதும் இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த நிலையில், சேற்றில் சிக்கி, பலவீனமான இருந்த அப்பெண் மீட்கப்பட்டார். அவர் பெயர் சண்டிகா ஸ்ரேஸ்தா, 60, என தெரிய வந்தது. மீட்கப்பட்ட அவர் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் வாயிலாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேபோன்று, ரசுவா மாவட்டத்தில், திரிசூலி – 1 நீர் மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கத்தில் சிக்கியிருந்த லுாகைடாவோ என்ற, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சுரங்கத்தில், 738 அடி ஆழத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
சேதமடைந்த நீர் மின் திட்ட சுரங்க பகுதிகளில் இன்னும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அஞ்சப்படும் நிலையில், இந்த மீட்பு முயற்சிகள், மீட்பு குழுவினருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
தொடரும் தேடுதல் பணி! திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று, 1,344 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன, 4,900க்கும் மேற்பட்டோரை தேடும் பணி, தொடர்கிறது. இதற்கிடையே, கடுமையாக பாதிக்கப்பட்ட நுவாகோட், ரசுவா உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் மாசுபடுதலை தடுப்பது மற்றும் தொற்று நோய் பரவலை தடுக்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
புதிய வெள்ள அபாயம்! நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தார்ச்சுலா மாவட்டத்தில் நிலச்சரிவால், சவுலானி ஆற்றின் ஓட்டம் தடைபட்டுள்ளது. அங்கு அதிகளவில் நீர் சேர்ந்து வருவதால், பெரு வெள்ளத்தை உருவாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று இந்தியர் மீட்பு! மீட்புப் பணிகள் குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தி: திரிசூலி பஜார் பகுதியில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று இந்தியர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை, 169 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 275 இந்தியர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் இருந்து, 1,907 இந்தியர்கள் பத்திரமாக நேபாளம் வந்து சேர்ந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 2 பேர் 11 நாட்களுக்கு பின் மீட்பு - Dinamalar
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 2 பேர் 11 நாட்களுக்கு பின் மீட்பு Dinamalar
1 week agoமீண்டும் சந்திக்கும் மோடி - புதின்! 11 நாள்களில் 2-வது முறை! - Dinamani
மீண்டும் சந்திக்கும் மோடி - புதின்! 11 நாள்களில் 2-வது முறை! Dinamani
6 days agoமீண்டும் சந்திக்கும் மோடி - புதின்! 11 நாள்களில் 2-வது முறை! - dinamani.com
மீண்டும் சந்திக்கும் மோடி - புதின்! 11 நாள்களில் 2-வது முறை! dinamani.com
6 days ago