T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 96 3 outlets citing India IN

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! - Dinamani

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! Dinamani

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

செப். 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை செல்லவுள்ளார்.

இலங்கையில் நடக்கும் சந்திப்பில் இந்திய வம்சாவளியுடன் உரையாடவுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தினர் அடங்கிய குழுவுக்கு ராஜ்நாத் சிங் தலைமை தாக்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தில் இந்தியா - இலங்கை இடையே பாதுகாப்பு, பொருளாதாரம், வணிக ஒத்துழைப்பு, மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டாண்மை பகிர்ந்துகொள்ளப்படும்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலும், டித்வா புயல் பாதிப்பின்போது முதல் நபரான நிவாரணப்பொருள்களை வழங்கி உதவியதாலும் இருதரப்பிலான உறவு உந்துசக்தியை எட்டியுள்ளது.

அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையை அடிக்கோடிட்டு காட்டும் வகையில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பயணம் இருக்கும் என்றும், வலுவான கடல்சார் வணிகம், பாதுகாப்பு தளவாட கூட்டு ஒத்துழைப்பு போன்றவற்றை மேம்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! - Dinamani

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! Dinamani

1 week ago
80 Google News Tamil Technology

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! - Dinamani

3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்! Dinamani

1 week ago
78 News18 Tamil

'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' .... ராஜ்நாத் சிங் 3 நாள் இலங்கை பயணம் - News18 Tamil

'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' .... ராஜ்நாத் சிங் 3 நாள் இலங்கை பயணம் News18 Tamil

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app