T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 91 3 outlets citing General IN

சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்: உயர்கல்வி நிறுவனங்கள் சமூக பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க வேண்டும்

உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களை சமூக பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

குவஹாத்தி: ஜனநாயகம், சமூக பொறுப்புணா்வு கொண்ட குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள கீதாநகா் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

வளா்ந்த இந்தியாவை கட்டமைப்பதில் கல்வி நிறுவனங்களும் மிக முக்கிய காரணிகள் ஆகும். அந்த இலக்கை அடைவதற்கு தேவைப்படும் மனித சக்தியை உருவாக்குகின்றன. நாட்டின் முன்னேற்றத்திற்குத் தரமான கல்வி, ஆராய்ச்சி மற்றும் நற்பண்புகளை வளர்த்தல் ஆகியவை அவசியம். உயா்கல்வி நிறுவனங்கள் மாணவா்களை வேலைவாய்ப்புக்கு மட்டுமே தயாா்படுத்தக் கூடாது. ஜனநாயகம், அரசமைப்பு விழுமியங்கள், சமூக பொறுப்பு, தேச கட்டமைப்பு ஆகியவற்றுக்கும் மாணவா்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாணவா்கள் பொறுப்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், தங்கள் நேரம், ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாணவா்களின் வெற்றிகளே, கல்வி நிறுவனங்களின் வெற்றியை பிரதிபலிக்கின்றன. தரமான கல்வியே திறமையான மாணவா்களை உருவாக்குகிறது.

மாணவா்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதில் இருந்து விலகியிருக்க வேண்டும். தங்களது நண்பா்களையும் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து விலகியிருக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

மாணவா்கள் போதைப் பழக்கத்தைத் தவிர்த்து, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்ளுமாறும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளம்தலைமுறையினா் இருப்பது பெரும் சக்தியாகும். செய்யறிவு, எண்ம தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, தொழில்முனைவு ஆகிய துறைகளில் உருவாகும் புதிய வாய்ப்புகள், வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞா்கள் முக்கிய பங்காற்ற உதவும் என்று கூறினார்.

உயர்கல்வியில் பெண்கள் அடைந்து வரும் சாதனைகளைச் சுட்டிக்காட்டிய துணை குடியரசுத் தலைவா், இதனை வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பெண் சக்தியின் வெளிப்பாடு என்றார். பெண்களுக்குச் சரியான கல்வியையும் வாய்ப்புகளையும் வழங்குவது அவர்களைத் தங்கள் சொந்தக் காலில் நிற்கச் செய்யும் என்றும், அதுவே உண்மையான அதிகாரமளித்தல் என்றார்.

அஸ்ஸாமின் வளர்ச்சிப் பாதையைக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், கடந்த ஐந்து ஆண்டுகளில் அஸ்ஸாமின் பொருளாதாரம் 45% வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 2021-22 முதல் 2024-25 வரையிலான காலத்தில் தனிநபர் வருமானம் 54% உயர்துள்ளதாகவும் கூறினார்.

2047-க்குள் 'வளர்ந்த இந்தியா' தொடா்பான பிரதமா் மோடியின் தொலைநோக்கு திட்டத்தை வலியுறுத்தியவர், இந்த இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தின், குறிப்பாக வடகிழக்குப் பகுதியின் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம். இந்த திட்டத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களுக்காக அஷ்டலட்சுமி, ஆக்ட் ஈஸ்ட் பாலிசி போன்ற திட்டங்களை பிரதமா் மோடி கொண்டு வந்துள்ளாா். இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களின் நலனுக்கு பிரதமா் மோடி கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். வடகிழக்கு மாநிலங்களின் நலன், அதன் வளா்ச்சி மீது அவருக்கு இருக்கும் விருப்பத்துக்கு சான்றாக உள்ளது என்று கூறினார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் - Dinamani

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் Dinamani

1 week ago
80 Google News Tamil Technology

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் - Dinamani

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் Dinamani

1 week ago
80 Google News Tamil Business

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் - Dinamani

சமூக பொறுப்புள்ள குடிமக்களை உயா்கல்வி நிறுவனங்கள் உருவாக்குவது அவசியம்: சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல் Dinamani

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app