T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 99 3 outlets citing Politics IN

உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்: குற்றச்சாட்டுகளை வாசிக்க 3 நாள்கள் தேவைப்பட்டதா?

திமுக மற்றும் டிவிகே இடையிலான அரசியல் மோதலில், எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் படிக்க மூன்று நாள்கள் எடுத்துக்கொண்டதை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

First reported 1 week ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? என்று முதல்வர் விஜய்யிடம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறை, மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதங்களின் மீது முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார். அப்போது அவர் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்க பேரவைத் தலைவர் மறுத்ததையடுத்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டு பின்னர் அவை வெளிநடப்பு செய்தனர். இன்று நாள் முழுவதும் பேரவையை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

இதையடுத்து உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில்,

"அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!" என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் விஜய்யின் பதிலற்ற பதிலுரையில் பழிபோடும் பேச்சும் திசைதிருப்பும் உத்திகளும் மட்டுமே இருந்ததாகவும் எந்த தயாரிப்பும் இன்றி சினிமா சூட்டிங் போல டயலாக் பேசியிருக்கிறார் என்றும் அடுத்த முறை சரியாக தயார் செய்து சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி - Dinamani

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி Dinamani

1 week ago
80 Google News Tamil Business

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி - Dinamani

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி Dinamani

1 week ago
80 Google News Tamil Sports

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி | DMK | TVK - Dinamani

குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதி | DMK | TVK Dinamani

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app