TVK Announces 'Secular Social Justice Victory Alliance' Name
Tamilaga Vettri Kazhagam (TVK) has officially named its coalition the 'Secular Social Justice Victory Alliance' following a meeting of its partner parties in Chennai. The announcement follows the party's second coordination meeting held on September 9.
First reported 5 days ago · latest update 5 days ago
தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது.
இந்தக் கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முன்னரே அறிவித்திருந்தன.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணியாக இது இருக்கும், இதன் தலைவராக தமிழக முதலமைச்சர் விஜய் இருப்பார். இந்தியா கூட்டணியின் அங்கமாகவே இந்தக் கூட்டணி இருக்கும். 2029 தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Citations · 4 reports from 4 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'- தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் இரண்டாவது கூட்டம் இன்று (செப்டம்பர் 09) சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில், தவெக கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' என பெ
5 days agoமதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்! - Dinamani
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்! Dinamani
5 days agoமதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்! - Dinamani
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக கூட்டணியின் அதிகாரப்பூர்வ பெயர்! Dinamani
5 days ago‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ – தவெக தலைமையில் அமைந்த புது கூட்டணி - News18 Tamil
‘மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ – தவெக தலைமையில் அமைந்த புது கூட்டணி News18 Tamil
5 days ago