சூர்யா 47 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ஆங்கிலப் பெயர் உறுதிப்படுத்தப்பட்டது
தீபாவளி விடுமுறையில் வெளியிடப்படும் சூர்யா 47 படத்தின் ஆங்கிலப் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி பல தமிழ் ஊடகங்களில் உறுதிப்படுத்தப்பட்டன. டைட்டில் கிளிப் வீடியோவும் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
First reported 5 days ago · latest update 5 days ago
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சூர்யாவே தன் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கு சீன் (scene) எனப் பெயரிட்டுள்ளதை டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே ஆண்டில் வெளியாகும் 3-வது திரைப்படம் என்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
மீண்டும் ஆங்கிலப் பெயர்... சூர்யா - 47 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! - Dinamani
மீண்டும் ஆங்கிலப் பெயர்... சூர்யா - 47 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! Dinamani
5 days agoமீண்டும் ஆங்கிலப் பெயர்... சூர்யா - 47 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! - Dinamani
மீண்டும் ஆங்கிலப் பெயர்... சூர்யா - 47 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி! Dinamani
5 days agoதீபாவளி ரிலீஸ்: 'சூர்யா 47' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது - Daily Thanthi
தீபாவளி ரிலீஸ்: 'சூர்யா 47' படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது Daily Thanthi
5 days ago