Recent news reports from Tamil Nadu covering crime, technology, and traffic incidents
Recent reports from Tamil Nadu cover diverse topics, including political criticism regarding a murder case, the emergence of smart lock technology, and police action against a driver performing dangerous stunts with a car.
First reported 5 days ago · latest update 2 days ago
இந்த நவீன காலத்தில், இன்னுமா சாவிகளைக் கொண்டு பூட்டுப் போட்டுக் கொண்டிருக்க முடியும். சொந்த வீடு என்றால், ஸ்மார்ட் பூட்டுகள்தான் சிறந்த தேர்வு.
க்யூபோ, கோத்ரேஜ், லாவ்னா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது ஸ்மார்ட் பூட்டுகள் தயாரிப்பில் இறங்கி வெற்றிக் கொடி நாட்டுகின்றன.
அப்படி ஸ்மார்ட் பூட்டுகளில் என்னவெல்லாம் சிறப்பம்சங்கள் உள்ளன என்றால். ஒரு முறை அல்ல இரண்டு முறைகள் அல்ல நான்கு விதமான பூட்டுத் திறப்பு முறைகளைப் பயன்படுத்தலாம்.
அவ்வளவு ஏன், கை விரல் ரேகையைப் பதிவு செய்துகூட ஸ்மார்ட் பூட்டுகளைத் திறந்து கொள்ளலாம்.
முந்தைய குலேப காவலி படத்தில் வரும் அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் என்று சொன்னால் கதவு திறப்பது போன்ற பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள், அதாவது பாஸ்கோடு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.
இல்லை... இல்லை... இன்னும் புது விதமாக இருக்க வேண்டும் என்றால், பழைய மந்திரவாதி படங்களில் குகைக் கதவைத் திறக்க அருகில் இருக்கும் கல்லை அசைக்க வேண்டும் என்பது போல, ஒரு சில நுணுக்கங்களைப் பின்பற்றி பூட்டுக்குள் சாவியை நுழைக்கும் துவாரத்தை திறந்து பிறகு சாவியைக் கொண்டு திறக்கும் வகையிலும் ஸ்மார்ட் பூட்டுகள் வந்துவிட்டன.
வைஃபையில் இயங்கும் பூட்டுகள், செயலியில் திறக்கும் பூட்டுகளும் வந்துவிட்டன.
ஸ்மார்ட் பூட்டுகளை நிறுவனங்களே வந்து இன்ஸ்டால் செய்து தருகின்றன. சில ஆண்டுகளுக்கு வாரண்டிகள், கியாரண்டிகளும் கிடைக்கின்றன.
ஓடிபி, பின் எண் செட் செய்து அதனைப் போட்டு திறப்பது, செல்போன் செயலி மூலம் ஓபன் செய்வது என விதவிதமாக வந்திருப்பதால் அதனை அவரவர் வசதிக்கேற்ப பார்த்து வாங்கிக் கொள்ளலாம்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள்! - Dinamani
அண்டா கா கசம் அபு கா ஹுக்கும் பாணியில் செயல்படும் ஸ்மார்ட் பூட்டுகள்! Dinamani
4 days agoபிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்... பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி - Vikatan
பிரதீப் ராஜ் படுகொலை: "முதலில் கொலைகள்... பின்னர் ஹீரோ சாகசமா?"- முதல்வர் விஜய்யைத் தாக்கும் கனிமொழி Vikatan
5 days agoகாா் சைலன்சரில் நெருப்பு: சாகசம் காட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை - Dinamani
காா் சைலன்சரில் நெருப்பு: சாகசம் காட்டிய ஓட்டுநருக்கு போலீஸ் வலை Dinamani
2 days ago