T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 86 3 outlets citing Business IN

Tamil Nadu government procures power; Central government mandates no fees for UPI transactions up to ₹2,000

The Tamil Nadu government is procuring an additional 2,000 MW of electricity to ensure uninterrupted power supply. Separately, the Indian central government has officially notified that UPI transactions up to ₹2,000 will be free of charges.

First reported 2 days ago · latest update 4 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

மாநிலத்தில் தடையற்ற மின்சாரம் விநியோகம் வழங்கப்படுவதற்காக கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருப்பதாவது, "கூடுதலாக 2,000 மெகாவாட் மின் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

மேலும், களப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு 24 மணிநேரமும் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளனர்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

தடையற்ற மின் விநியோகம்! கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு - Dinamani

தடையற்ற மின் விநியோகம்! கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு Dinamani

2 days ago
80 Google News Tamil Business

ரூ. 2,000 வரை கட்டணமில்லா யு.பி.ஐ பரிவர்த்தனை - அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசு - ETV Bharat

ரூ. 2,000 வரை கட்டணமில்லா யு.பி.ஐ பரிவர்த்தனை - அரசிதழில் வெளியிட்ட மத்திய அரசு ETV Bharat

6 hours ago
80 Google News Tamil Sports

யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்னைகளுக்கு கட்டணம் கூடாது: மத்திய அரசு - Dinamani

யுபிஐ மூலம் ரூ.2,000 வரையிலான பணப்பரிவர்த்னைகளுக்கு கட்டணம் கூடாது: மத்திய அரசு Dinamani

4 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app