இந்தியா ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்றது; சைமா விருதுகளை வென்ற டூரிஸ்ட் பேமிலி
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 2026 போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேபோல், சைமா அவார்ட்ஸ் 2026 விழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் 6 விருதுகளை வென்றுள்ளது.
First reported 1 day ago · latest update 1 hour ago
2025ம் வருடத்தில் வெளியான படங்களுக்கான 14வது சைமா விருதுகள் செப்டம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. 12ம் தேதி தமிழ், மலையாளப் படங்களுக்காகவும், 13ம் தேதி தெலுங்கு, கன்னடப் படங்களுக்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. "டூரிஸ்ட் பேமிலி" படம் அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றுள்ளது.
தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் விவரம்…
சிறந்த இயக்குனர் - அஷ்வத் மாரிமுத்து (டிராகன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரவி கே சந்திரன் (தக் லைப்)
சிறந்த நடிகர் - துருவ் விக்ரம் (பைசன் காளமாடன்)
சிறந்த துணை நடிகர் - சமுத்திரக்கனி (காந்தா)
சிறந்த துணை நடிகை - ஸ்வாசிகா (மாமன்)
சிறந்த நடிகர் எதிர்மறை கதாபாத்திரம் - அர்ஜுன் தாஸ் (குட் பேட் அக்லி)
சிறந்த அறிமுக நடிகர் - எல்கே அக்ஷ்ய் குமார் (சிறை)
சிறந்த அறிமுக இயக்குனர் - அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் பேமிலி)
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - குடும்பஸ்தன்
சிறந்த இசையமைப்பாளர் - சாய் அபயங்கர் (டியூட்)
சிறந்த பாடலாசிரியர் - சாரதி (சிறை - நீலோத்தி….பாடல்)
சிறந்த பின்னணிப் பாடகர் - விஜய் யேசுதாஸ் (டூரிஸ்ட் பேமிலி - இறகே... பாடல்)
சிறந்த பின்னணிப் பாடகி - சுபலாஷினி (கூலி - மோனிகா… பாடல்)
சிறந்த நடிகர் - மக்கள் விருப்பம் - பிரதீப் ரங்கநாதன் (டிராகன்)
சிறந்த படம் - விமர்சகர் விருப்பம் - டூரிஸ்ட் பேமிலி
சிறந்த நடிகை - பிரபலம் - சிம்ரன் (டூரிஸ்ட் பேமிலி)
சிறந்த நடிகை - விமர்சகர் விருப்பம் - பாக்யஸ்ரீ போர்ஸே (காந்தா)
நடிகை பாரதி விஷ்ணுவர்தன், நடிகை லட்சுமி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சில விருதுகளின் விவரம் இன்னும் வெளியாகவில்லை. "டூரிஸ்ட் பேமிலி" படக்குழுவினர் மொத்தமாக, அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றதாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
சைமா அவார்ட்ஸ் 2026 : 6 விருதுகளை வென்ற ‛டூரிஸ்ட் பேமிலி - Dinamalar
சைமா அவார்ட்ஸ் 2026 : 6 விருதுகளை வென்ற ‛டூரிஸ்ட் பேமிலி Dinamalar
1 hour agoஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 2026 | தென்கொரியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா! - etvbharat.com
ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி 2026 | தென்கொரியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா! etvbharat.com
1 day agoசைமா அவார்ட்ஸ் 2026 : 6 விருதுகளை வென்ற ‛டூரிஸ்ட் பேமிலி - Dinamalar
சைமா அவார்ட்ஸ் 2026 : 6 விருதுகளை வென்ற ‛டூரிஸ்ட் பேமிலி Dinamalar
1 hour ago