T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 100 3 outlets citing Sports GB

மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

11 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்திற்குப் பிறகு, இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மார்க் வுட் அறிவித்துள்ளார். இதனை பல்வேறு விளையாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

First reported 2 hours ago · latest update 5 minutes ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

மார்க் வுட் கடந்த 2015ல் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் 150+ கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர்.

38 டெஸ்ட்டில் 119 விக்கெட்டுகளும் 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளும் 38 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் 2019 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற போதும் மார்க் வுட் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். காயத்துடனே இறுதிப் போட்டியில் பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் டி20 உலகக் கோப்பையை வென்றது. இதில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அதிவேகமாக பந்துவீசுவதால் அதிகமான காயம் ஏற்படுவதும் மார்க் வுட்டுக்குச் சிக்கலாக அமைந்தது. ”இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது என்பது எனக்கு மிகவும் பெருமையானது. கனவு நனவானது என்றுதான் கூற வேண்டும். உலகம் முழுவதும் பயணித்து சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியது நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! - DinaMani

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! DinaMani

1 hour ago
83 Vikatan

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! - Sports Vikatan

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! Sports Vikatan

5 minutes ago
80 Google News Tamil Sports

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதே கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! - DinaMani

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதே கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்! DinaMani

2 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app