News updates: Sivaji Ganesan's family introduces new actor; IT stocks decline
A sixth actor from the family of legendary actor Sivaji Ganesan is set to debut in the film industry. Separately, IT sector stocks have experienced a decline for the sixth consecutive day, with Infosys shares seeing a significant drop.
First reported 6 hours ago · latest update 4 hours ago
அவரது இளைய மகன் பிரபு, 1982ல் வெளிவந்த "சங்கிலி" படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கெனத் தனி புகழைப் பெற்றார். இப்போதும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பிரபுவின் அண்ணன் ராம்குமார் 1988ல் வெளிவந்த "அறுவடை நாள்" படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் மட்டும் நடித்தார். “ஐ, எல்கேஜி” ஆகிய படங்களில் அவரது நடிப்பை இன்றைய தலைமுறை ரசிகர்கள் பார்த்திருக்கலாம்.
ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் 2003ல் வெளிவந்த "சக்சஸ்" படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அடுத்து "மச்சி, தீர்க்கதரிசி” ஆகிய படங்களில் மட்டும் நடித்தார்.
பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 2012ல் வெளிவந்த "கும்கி" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கடந்த 13 வருடங்களில் 25 படங்களில் நடித்துவிட்டார். கடந்த வருடம் அவரது 25வது படமாக வெளிவந்த "சிறை" வெற்றிப் படமாக அமைந்தது. அவர் தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ராம்குமாரின் இளைய மகன் தர்ஷன் கணேசன் இன்று வெளியாகியுள்ள "லெனின் பாண்டியன்" படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்க வரும் 6வது நடிகர் இவர். புனேவில் நடிப்புப் பயிற்சி பயின்றவர். தமிழ், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். அறிமுகப் படத்திலேயே அவரது நடிப்பைப் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
ராம்குமாரின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த சிவாஜி தேவ் 2008ல் வெளியான "சிங்கக்குட்டி" படத்தில் நாயகனாக அறிமுகமானார். நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரியைத்தான் ராம்குமார் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அதற்கடுத்து "புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டார். நடிகை சுஜா வருணியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்தவர் அம்பிகா. சிவாஜிகணேசன், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக…
லெனின் பாண்டியன் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அவரது தம்பி கங்கை அமரன் கதைநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ரோஜா. சிவாஜ…
அதிக அளவிலான சமூகத் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த 1960களில், புராண, இதிகாச பக்தித் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி, வெற்றிகளைக் குவி…
தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தலைசிறந்த கதை வசனகர்த்தாவாக, எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், எஸ் எஸ் ராஜேந்திரன் போன்ற அன்றை…
திரிபுரசுந்தரி என்ற இயற்பெயரைக் கொண்ட எழுத்தாளர் லட்சுமி அடிப்படையில் ஒரு மருத்துவர். இவர் 150க்கும் அதிகமான நாவல்களையும், ஆயிரக்கணக்கான சிற…
தமிழ் சினிமாவில் புதுமை செய்த, புரட்சி செய்த இயக்குனர்களின் ஒருவர் ஸ்ரீதர். அவரின் படங்கள் வித்தியாசமானவை, அவர் கதை சொல்லும் பாணி, நடிகர்களி…
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
சிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர் - Dinamalar
சிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர் Dinamalar
6 hours agoசிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர் - cinema.dinamalar.com
சிவாஜி குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் 6வது நடிகர் cinema.dinamalar.com
6 hours agoதொடர்ந்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்த ஐடி பங்குகள், இன்ஃபோசிஸ் பங்கு பெரும் சரிவு - The Economic Times Tamil
தொடர்ந்து 6வது நாளாக வீழ்ச்சி அடைந்த ஐடி பங்குகள், இன்ஃபோசிஸ் பங்கு பெரும் சரிவு The Economic Times Tamil
4 hours ago