மூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! - dinamani.com
மூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! dinamani.com
First reported 2 days ago · latest update 12 hours ago
நாடு முழுவதும் சிமெண்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூலதனப் பொருள்களின் விலை உயர்வால், சிமெண்ட் தயாரிப்புத் துறையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விலை உயர்த்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கட்டுமான பொறியியல் துறையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சிமெண்ட் துறையில் சந்தை மூலதன மதிப்பு 31% அதிகரித்துள்ளது அல்லது ரூ. 1.6 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. இதேகாலகட்டத்தில் சிமெண்ட் துறையில் புதிய நிறுவனங்கள் இணைந்ததுடன், முதலீட்டாளர்களின் வரவும் வலுவாகவும் நேர்மறையாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்ட பிறகும் சிமெண்ட் விலையில் பெரிதாக மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் போர்ச்சூழல் காரணமாக எழுந்த கச்சா எண்ணெய் தட்டுப்பாடிலும் விலையில் எந்தவொரு மாற்றமும் நிகழாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது மூலதனப் பொருள்களின் விலை ஏற்றத்தால் சிமெண்ட் விலையை உயர்த்தும் கட்டாயத்தில் நிறுவனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலையில் நேர்மறையான மாற்றம் நிகழ்ந்தால், முதலீட்டாளர்களுக்கு சிமெண்ட் துறையில் நம்பிக்கை ஏற்படும் என்றும், அதன் பிறகு இத்துறை தொடர்ந்து லாபகரமானதாகவே இருக்கும் என முதலீட்டு தரகு நிறுவனங்கள் கூறுகின்றனர்.
எனினும் அடுத்த சில ஆண்டுகளுக்கு இத்துறையில் குறிப்பிடத்தக்க எந்தவொரு மாற்றமும் நிகழும் என எதிர்பார்க்கவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
மூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! - dinamani.com
மூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! dinamani.com
1 day agoமூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! - Dinamani
மூலப்பொருள்கள் வரத்து குறைவு... சிமெண்ட் விலை உயரும் அபாயம்! Dinamani
12 hours agoதிண்டுக்கல் சந்தைக்கு மீன் வரத்து சரிவு: புரட்டாசி மாதத்திலும் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி - News18 Tamil
திண்டுக்கல் சந்தைக்கு மீன் வரத்து சரிவு: புரட்டாசி மாதத்திலும் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி News18 Tamil
2 days ago