T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 77 3 outlets citing Politics IN

சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சேவை தேர்வை எழுதினர் என்ற விவாதம்

பல தமிழ் ஊடகங்கள் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேதாஜி சமஸ்கிருதத்தில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதியதாக கூறுகின்றன, மேலும் பிரதமர் மோடி அவர்களின் செயல்களைப் பற்றிய கருத்தை வெளியிட்டார். இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை; விவாதம் அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியது.

First reported 2 days ago · latest update 21 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Dinamani Authority 84

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியதாக பிரதமர் நரேந்திர மோடி கூறிய பேச்சுக்கு, நேதாஜி கொள்ளுப்பேரன் சந்திரகுமார் போஸ் மறுப்புத் தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

யுபிஎஸ்சி-யின் நூற்றாண்டு விழாவில், பிரதமர் மோடி பேசிய இந்த பேச்சு வைரலான சில மணிநேரங்களிலேயே, நேதாஜியின் கொள்ளுப் பேரன் சந்திர குமார் போஸ், அந்த தகவல் தவறானது என்று பொதுவெளியில் பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் பேச்சு குறித்த செய்தியை மேற்கோள்காட்டி, சந்திர குமார் போஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சமஸ்கிருதம், வங்காளம், ஹிந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், உருது, ஹிந்துஸ்தானி என பல மொழிகள் அறிந்தவர். அவர் பல மொழி வித்தகர்தான். ஆனால், இந்தியக் குடிமைப் பணித் தேர்வை (Indian Civil Service exam) அவர் ஆங்கிலத்தில்தான் எழுதினார்; ஏனெனில், அத்தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்தப்பட்டது.

ஆனால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தகைய தவறான தகவலை வழங்கியது யார் என்று. வரலாற்றை இத்தகைய விதமாகத் திரித்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும், ஜெய் ஹிந்த் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் சமஸ்கிருத தேர்வு குறித்த பேச்சு குறித்து சமூக ஊடகத்தில் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சந்திர குமார் போஸ் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

என்ன பேசியிருந்தார் பிரதமர் மோடி?

கடந்த 1926-ம் ஆண்டு யுபிஎஸ்சி நிறுவப்பட்டு, நூறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், ஓராண்டு கால கொண்டாட்டங்களின் நிறைவாக அக். 1ஆம் தேதி புது தில்லியில் யுபிஎஸ்சி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நினைவு நாணயம், அஞ்சல் தலை வெளியிட்ட பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றியபோது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த கடந்த 1920-ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திர போஸ் சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதினார்.

ஒவ்வொரு இந்தியரும் யுபிஎஸ்சி நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் கொண்டாடும் தருணம் இது.

↗ Read the original at Dinamani

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 Dinamani ★ most authoritative citation

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும்! - Dinamani

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும்! Dinamani

21 hours ago
80 Google News Tamil Technology

சுபாஷ் சந்திர போஸ் குடிமைப் பணித் தேர்வுகளை சமஸ்கிருதத்தில் எழுதினார்! - பிரதமர் மோடி பேச்சு! - dinamani.com

சுபாஷ் சந்திர போஸ் குடிமைப் பணித் தேர்வுகளை சமஸ்கிருதத்தில் எழுதினார்! - பிரதமர் மோடி பேச்சு! dinamani.com

2 days ago
80 Google News Tamil Business

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும்! - Dinamani

நேதாஜி சமஸ்கிருதத்தில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாரா? பிரதமர் பேச்சும் பேரனின் மறுப்பும்! Dinamani

21 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app