கூட்டுறவு நிறுவனங்களில் கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன் அறிவிப்பு
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் இனி கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
First reported 5 hours ago · latest update 4 hours agoகூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ. 10,000 வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் நகைக் கடன்களுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 12%-ல் இருந்து 13% ஆக உயர்த்தப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% அல்லது கிராம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ரூ. 7,000/- எனவும், 6 மாத கால அவகாசம் கொண்ட கடன்களுக்கு மாதாந்திர சராசரி சந்தை மதிப்பைக் கணக்கில் கொண்டு 75% வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இன்று (அக். 5) நடைபெற்ற முக்கிய கூட்டத்தொடரில் நகைக் கடன்கள் தொடர்பாகப் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.கடன் அளவு உயர்வு:நகைக் கடன்களுக்கு (Jewel Loan) ஒரு கிராமிற்கான கடன் தொகை அதிகபட்சமாக ரூ. 10,000/- வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75% என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.வட்டி விகிதத்தில் சலுகை & சீரமைப்பு:மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது.இதனைச் சீரமைக்கும் வகையில்.
JL-CC PACCS-க்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம். DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியைவிடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் (Renewal) கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..The Tamil Nadu government has announced that loans of up to rs. 10,000 per gram will be provided against jewellery in cooperative institutions..கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசு.தினமணி செய்திமடலைப் பெற...
Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு! - Dinamani
கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு! Dinamani
4 hours agoஇனி கூட்டுறவு நிறுவனங்களில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் கிடைக்கும்... வெளியான அறிவிப்பு - tamil.news18.com
இனி கூட்டுறவு நிறுவனங்களில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் கிடைக்கும்... வெளியான அறிவிப்பு tamil.news18.com
5 hours agoஇனி கூட்டுறவு நிறுவனங்களில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் கிடைக்கும்... வெளியான அறிவிப்பு - News18 Tamil
இனி கூட்டுறவு நிறுவனங்களில் கிராமிற்கு ரூ.10,000 வரை நகை கடன் கிடைக்கும்... வெளியான அறிவிப்பு News18 Tamil
5 hours ago